Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் இந்த இலையோட ஜூஸ் குடிச்சீங்கனா சிறுநீரக பிரச்சனை வரவே வராதாம்...

வெறும் வயிற்றில் இந்த இலையோட ஜூஸ் குடிச்சீங்கனா சிறுநீரக பிரச்சனை வரவே வராதாம்...

அனைவரது வீட்டிலும் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுவது கொத்தமல்லி. பொதுவாக கொத்தமல்லியை உணவின் வாசனை, அலங்காரம் அல்லது சட்னி செய்ய போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட கொத்தமல்லியை சிலர் உணவில் ஒதுக்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். ஏனென்றால், இந்த கொத்தமல்லியை உட்கொள்வதால் உடலில் எந்தவித நோயும் ஏற்படாதாம். கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகளில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது உங்கள் இரத்த உறைவுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் கே உங்கள் எலும்புகள் தங்களைத் தாங்களே சரிசெய்து கொள்ள உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் கொத்தமல்லி உதவுகிறது. அப்படிப்பட்ட கொத்தமல்லியின் சாறை தொடர்ந்து உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கொத்தமல்லியை சாறை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

கொத்தமல்லி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சிறுநீரக பிரச்சனையை நீக்கும்

வெறும் வயிற்றில் கொத்தமல்லி சாறு எடுத்துக்கொள்வதால் அனைத்து விதமான சிறுநீரக பிரச்சனைகளும் குணமாகும். ஏனென்றால், கொத்தமல்லி நம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிட உதவும். இதன் காரணமாக, நமது உடலும், சிறுநீரகமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

உடல் எடை குறையும்

இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையால் பலரும் சிரமப்படுகிறார்கள். உடல் எடை குறைக்க முயற்சி செய்து வருபவர்கள், கொத்தமல்லி சாறை வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கூடுதல் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் பருமன் விரைவில் குறையும்.

பொலிவிழந்த கால் பாதங்களை பளிச்சென்று மாற்ற தயிருடன் இத கலந்து பயன்படுத்துங்க…

இதயத்தைப் பாதுகாக்கும்

கொத்தமல்லியில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. எனவே, இதயக் கோளாறு உள்ளவர்கள், கொத்தமல்லியை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அந்த நோயில் இருந்து விடுபடலாம். இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உணவில் கொத்தமல்லி சேர்த்து கொள்ள முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பகல் நேரத்தில் தூங்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். உங்களுக்கு அந்த பழக்கம் இருக்கா?

சரும பிரச்சனைகளை போக்கும்

கொத்தமல்லியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எனவே, சருமத்தை வெண்மையாக்க கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மந்தமான சருமம் உள்ளவர்கள், கொத்தமல்லி சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் சருமமும் பளபளப்பாக மாறும். பொலிவான சருமம் பெற விரும்புபவர்கள் உணவில் கொத்தமல்லியைத் தவிர்க்கவே கூடாது.

கொத்தமல்லி சாறு தயாரிப்பது எப்படி?

  • கொத்தமல்லி சாறு தயாரிக்க, முதலில் கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
  • அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின்னர் அதை நன்றாக வடிகட்டி சுவைக்காக சிறிது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →